நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்னிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இது அடுத்த 2 நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும் என கூறப்பட்டுள்ளது.