நாட்டில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தகளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி இன்று காலை 07.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய-கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் கடற்படையினர் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.