தெற்கு லெபனானில் வீடு ஒன்றில் தங்கியிருந்த 19 பேர் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் ஐந்து குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் இராணுவம் இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
லெபனான் மீதான தாக்குதல்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேல் முன்னதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.