ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக் குழுவின் தலைவர் உபுல் தரங்கவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெறுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
ஆட்ட நிர்ணய சதி வழக்கில் நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக மாத்தளை மேல் நீதிமன்றம் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு எதிராக பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தது.
இது தொடர்பான வழக்கு எதிர்காலத்தில் விசாரணைக்கு அழைக்கப்படும் போது மாத்தளை மேல் நீதிமன்றில் ஆஜராகவுள்ளதாக உபுல் தரங்க தனது சட்டத்தரணிகள் ஊடாக வழங்கிய உறுதிமொழியை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.