ஒக்டோபர் 31 ஆம் திகதி தீபாவளி விடுமுறையை முன்னிட்டு தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளும் எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மூடப்படும்.
இதேவேளை, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலப் பாடசாலைகளும் நாளை மறுதினம் விசேட பாடசாலை விடுமுறையாக மூடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும், இந்த மேலதிக விடுமுறையை உள்ளடக்கும் வகையில் குறித்த பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகள் நவம்பர் 09 ஆம் திகதி (சனிக்கிழமை) இயங்கும் என வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வி அமைச்சின் அறுவுறுத்தல்களுக்கு அமைய பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.