”மலையக மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டும்” என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
உடபுஸ்ஸல்லாவை பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”எதிர் வரும் பொதுத் தேர்தல் மலையக மக்களுக்கு மிகவும் முக்கியமான தேர்தலாகும். மலையக மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். நாம் ஒன்றுமையாக செயற்படும் போது மாத்திரமே எம்மால் மலையகத்திற்கான உரிமையை நிலை நாட்ட முடியும்.
இத் தேர்தலில் நாம் மிகவும் உன்னிப்பாக செயற்பட்டு எமது வாக்குகளை வழங்க வேண்டும். மலையக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அவர்கள் விரும்பும் மாற்றத்தை ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியினால் வழங்க முடியும்.
அதற்கமைய பதுளை மாவட்டத்தில் காணப்படும் குறைந்தளவான வாக்குகளை சிதறடிக்காமல் அனைவரும் ஒன்று சேர்ந்து நன்றாக சிந்தித்து எமக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
@athavannews ஒற்றுமையுடன் மாற்றம் வேண்டும்!