தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் பலமான சக்தியாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.