தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் அந்தந்த பணிகளுக்காக நியமிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டும் என தேர்தல் ஆணையத் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தேர்தல் தொடர்பில் அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன்படி, தேர்தல் பணிகளுக்காக வழங்கப்படும் நியமனங்களை எந்த வகையிலும் மாற்றவோ, ரத்து செய்யவோ கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.