எதிர்வரும் மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற குடிமக்களை உருவாக்கக்கூடிய ஒடுக்குமுறையற்ற கல்வியை மாணவர்கள் உறுதி செய்வதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்
புதிய அரசாங்கத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் தனது அமைச்சுப் பதவியை இன்று பொறுப்பேற்றுக்கொண்ட போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், ஒரு பாடத்துடன் தொடர்புடைய அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்வதில் பணிவுடன் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.
அத்துடன் புதிய அரசின் கொள்கைகளின்படி, கல்விக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு, முறையான முறை மற்றும் அட்டவணையின்படி பாடசாலை கல்வியை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் எனவும், தற்போது கல்வித்துறையில் நிலவும் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மேலும் மக்கள் அனைவரினதும் கணிசமான ஆதரவு அதற்கு அவசியம் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளராக கே. எம். ஜி. எஸ். என். களுவெவாவும் தனது பதவியை ஏற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது


















