இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் எஞ்சிய ஆட்டங்களை தென்னாப்பிரிக்க துடுப்பாட்ட வீரர் வியான் முல்டர் (Wiaan Mulder) தவறவிட்டுள்ளார்.
வலது கை நடுவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அவர் அடுத்த எஞ்சியுள்ள போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.
டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் தற்சமயம் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய தினம், தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸில் அவர் உபாதைக்கு உள்ளானார்.
இந்த இன்னிங்ஸில் அவர் ஆட்டமிழக்காது ஒன்பது ஓட்டங்களை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.