கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில், தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் பீன்ஸ் தவிர்ந்த ஏனைய மரக்கறிகளின் மொத்த விலை இன்று குறைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி இன்று தம்புள்ளை பொருளாதார வர்த்தக நிலையத்தில் ஒரு கிலோ பீன்ஸ் மொத்த விற்பனை விலை 650 முதல் 700 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் கடந்த நாட்களை விட அதிக விலைக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பச்சை மிளகாய் இன்று 150 முதல் 200 ரூபாய் வரை குறைந்துள்ளதுடன் 300 முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி 150 முதல் 200 ரூபாய் வரையிலும், பூசணிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்னிலையில் ஒரு கிலோ வெண்டைக்காய் நூறு முதல் நூற்றி இருபது ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டதுள்ளதுடன் மலையகத்தில் இருந்து வரும் மரக்கறிகளின் மொத்த விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் தேங்காய் ஒன்றின் மொத்த விலை 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதை காணக்கூடியதாக உள்ளதுடன் சில்லறை சந்தையில் தேங்காய் ஒன்று 180 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.