நாடு முழுவதுமான பயங்கரவாதத் தாக்குதல்களின் அபாயத்தை மேற்கொள் காட்டி, பங்களாதேஷத்துக்கான பயண ஆலோசனையை ஐக்கிய இராச்சியம் புதுப்பித்துள்ளது.
அதன்படி, வன்முறையால் பாதிக்கப்பட்ட தெற்காசிய தேசத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்த வாய்ப்புள்ளதாகவும், அதனால் பங்களாதேஷுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறும் இங்கிலாந்து தனது குடிமக்களை எச்சரித்துள்ளது.
செவ்வாயன்று வெளியிடப்பட்ட புதிய பயண ஆலோசனையில்,
வெளிநாட்டு பிரஜைகள் பார்வையிடும் நெரிசலான பகுதிகள், மத வழிபாட்டு கட்டிடங்கள் மற்றும் அரசியல் பேரணிகளை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரித்துள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல்களின் சாத்தியக்கூறுகளைத் தவிர, ஆயுதக் கொள்ளை, வன்முறைக் குற்றம் மற்றும் கற்பழிப்பு உள்ளிட்ட பிற சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் இங்கிலாந்து அரசாங்கம் எச்சரித்துள்ளது.
இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவரான சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் நவம்பர் 25 அன்று கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர், சிறுபான்மை இந்து சமூகத்திற்கு எதிராக பங்களாதேஷில் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் இந்த அறிவுறுத்தல் வந்துள்ளது.