கரையோர மார்க்கமூடான ரயில் சேவைகள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (09) காலை இரத்மலானைக்கும் கல்கிஸைக்கும் இடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை விரைவில் சீரமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.