ஜோர்டானிலுள்ள முதியோர் இல்லமொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டின் தலைநகரான அம்மானிலுள்ள தனியாருக்குச் சொந்தமான முதியோர் இல்லமொன்றிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த முதியோர் இல்லத்தில் சுமார் 111 முதியவர்கள் வசித்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இல்லத்தின் முதல் தளத்திலேயே திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 55 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்தவர்களில் 5 பேரின் நிலை கவலைகிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தீவிபத்துக்கான காரணம் இது வரை வெளிவராத நிலையில் இது குறித்த தீவிர விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.