நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் மிகப் பெரிய நீர்த் தேக்கமான கந்தளாய் குளத்தின் 04 வான் கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
குளத்தில் அதிகபட்ச நீர் கொள்ளளவு ஏக்கருக்கு 114000 அடியாக காணப்படுவதாகவும், திறக்கப்பட்டுள்ள நான்கு வான்கதவுகள் மூலம் வினாடிக்கு 700 கனஅடி நீர் வெளியேற்றப்படும் எனவும் கந்தளாய் நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ் ஏ சீ எஸ் சுரவீர தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இது முன்கூட்டிய ஆயத்த நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், தொடர்ச்சியான நீர் வரத்தின்போது குறித்த பகுதியிலுள்ள விவசாய நிலங்களை பாதுகாக்கும் நோக்கில் இதனை முன்னெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்