பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அம்பாறை மாவட்டம் – பொத்துவில்லில் இருந்து கடந்த 17.12.2024 ம் திகதி நடைபயணம் மேற்கொண்டு வந்த எஸ்.ஏ.ஜபர் என்பவர் இன்று கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தினை வந்தடைந்துள்ளார்
தேசிய தமிழ்,முஸ்லீம்,சிங்கள மக்களது ஐக்கியம் மூலமே சிறுபான்மை மக்களது அதிகாரப் பரவலாக்களுக்கான அரசியல் தீர்வு, இனவாத பிரிவினைவாத பிரித்தாளும் முதாலாளித்துவக் கொள்கையை தோல்வியுறச்செய்து உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் சுய மனித ஜனநாயக பாதுகாப்போம் ஆகிய கருத்துக்கள் அடங்கிய மஹஜர் ஒன்றுடன் ஆளுநர் செயலகம் வரை அவரது நடைபயனம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும் இன நல்லிணக்கத்தினை வலியுறுத்தும் வகையிலாகவும் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் அவர்களது விபத்திற்கான நீதியினையும் இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது