2024 ஆம் ஆண்டிற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் கல்வி தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (02) ஆரம்பமாகியுள்ளது.
அனைத்து பாடசாலைகளதும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை எதிர்வரும் 24 ஆம் திகதியன்று நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதேநேரம், 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணை ஜனவரி 27 ஆம் தொடங்கி மார்ச் 14 ஆம் திகதியுடன் நிறைவு பெறும்.
இதனிடையே, 2025 ஆம் ஆண்டு அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கையானது எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வியாழன் அன்று ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.