யோஷித ராஜபக்ச, சட்டவிரோத சொத்துக்களை பெற்றுக் கொண்டமை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் சுமார் 2 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெற்றுக் கொண்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
அதன்படி யோஷித ராஜபக்ச இன்று (வெள்ளிக்கிழமை) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்
கதிர்காமம் பகுதியில் உள்ள அரச காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக இன்று அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது