வடக்கு கிழக்கு கடற்கரை பிரதேசங்களில் கடலில் மர்மப் பொருள்கள் கரையொதுங்கும் செயற்பாடுகள் அண்மைய நாட்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இதன் தொடரில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளைக் கடற்கரையில் இன்று மரமப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இன்றயதினம் அதிகாலையில் வழமை போன்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களே குறித்த மர்மப் பொருளைக் கண்டுள்ளனர்.
இவ்வாறு மர்மப் பொருள் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் கடற்படைக்கு தாம் அறிவித்துள்ளதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.