யாழ்ப்பாணம், பள்ளிக்குடா பகுதியில் 108.460 கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்த 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பூனேரி, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் மல்லாவி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 35 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக மேற்கொண்டு வருகின்றனர்.