வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் நேற்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் ஆரம்பமாக குறித்த போராட்டம் யாழ். நகரத்தின் ஊடாக பயணித்து ஆளுநர் அலுவலகத்தை வந்தடைந்தது.
இதன் போது போராட்டக்காரர்கள் வடக்கு மாகாண ஆளுநரை சந்திக்க முற்பட்டனர். எனினும் நான்கு பேர் மாத்திரம் ஆளுநருடன் பேச முடியும் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் வீதியை மறிக்க முற்பட்டதால் பொலிஸாருடன் தர்க்கம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் போராட்டக்காரர்களைச் சந்தித்து கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது
வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனை நாடு முழுவதும் இருப்பதாகவும் இது தொடர்பான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டு அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஆளுநர் உறுதிமொழி வழங்கினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.