• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகள்!

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகள்!

Rahul by Rahul
2025/01/22
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்கை ரீதியான முடிவுகளை எடுப்பதற்காக விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க உள்ளிட்ட உணவுக் கொள்கை மற்றும் உணவு பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்கள் இன்று  ஜனாதிபதி அலுவலகத்தில்  கூடியுள்ளனர்.

அனைத்து பிரஜைகளுக்கும் பாதுகாப்பான, சுகாதாரப் பாதுகாப்பான மற்றும் நிலையான உணவுக் கட்டமைப்பொன்றை உறுதி செய்யும் அரசாங்கத்தின் கொள்கையை நிறைவேற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பது உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழுவின் நோக்கமாகும்.

அத்துடன்  உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதில் தரவுகளும் தகவல்களும் மிக முக்கியமானவை என்றும், அவையின்றி முடிவுகளை எடுக்கும் அபாயத்தை எதிர்கொள்ள இந்த அரசாங்கம் இனியும் தயாரில்லை என்றும் எனவே, துல்லியமான தரவுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிப்பது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டிருந்தது.

மேலும் நேரடி பாவனைக்காகவும் கோழி மற்றும் முட்டைக் கைத்தொழிலுக்கு தேவையான கால்நடை தீவனம் , பியர் உற்பத்தி போன்ற மனித நுகர்வு உள்ளிட்ட அனைத்து கைத்தொழில்களுக்கும் உள்ளீடுகளாக அரிசியை வழங்குவது குறித்து அபிவிருத்தியடைந்த விவசாயக் கொள்கையை நடைமுறைப்படுத்துகையில் கவனத்தில் கொள்ளளப்பட வேண்டும் என விவசாய அமைச்சர் இங்கு  தெரிவித்தார்.

இதேவேளை நாட்டு மக்களின் உணவு நுகர்வு தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் ஆரோக்கியமான மக்களை உருவாக்கவும், உணவு விரயத்தைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் குழு உறுப்பினர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்பை நிறுவுதல், அத்தியாவசிய உணவுப் பொருள் தகவல் கட்டமைப்பைப் பராமரித்தல், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் புதிய திட்டத்தை உருவாக்குதல் மற்றும் அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிக்கவும் விநியோகத்திற்கு திட்டமொன்றைத் தயாரித்தல் ஆகிய பல விடயங்கள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதுடன் உணவுப் பாதுகாப்பு, உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் சந்தை முகாமைத்துவம் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

இதில் பிரதமரின் செயலாளர் ஜி.பி. சபுதந்திரீ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்கிய உணவுக் கொள்கை மற்றும் உணவு பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

Related

Tags: foodlkanewssl athavanews slnewsupdate
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீதிபதி இளஞ்செழியனுக்கு அநீதி! அரசு திட்டமிட்டு புறக்கணிப்பதாகக் குற்றச்சாட்டு!

Next Post

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு!

Related Posts

இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!
இலங்கை

இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!

2026-10-20
நாட்டின் பல பகுதிகளில் மின் தடை!
இலங்கை

திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்!

2026-10-20
இன்று பிற்பகல் முதல் மழை தீவிரமடையும் சாத்தியம்!
ஆசிரியர் தெரிவு

இன்று பிற்பகல் முதல் மழை தீவிரமடையும் சாத்தியம்!

2026-10-20
இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!
இலங்கை

இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

2026-10-19
ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்து!
இலங்கை

ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்து!

2026-10-19
நாடு தழுவிய மின் தடை தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு!
இலங்கை

நாடு தழுவிய மின் தடை தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பு!

2026-10-19
Next Post
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அம்பலந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு!

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது!

முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!

இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!

0
நாட்டின் பல பகுதிகளில் மின் தடை!

திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்!

0
இன்று பிற்பகல் முதல் மழை தீவிரமடையும் சாத்தியம்!

இன்று பிற்பகல் முதல் மழை தீவிரமடையும் சாத்தியம்!

0
ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு பிரித்தானியா தடை!

ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு பிரித்தானியா தடை!

0
இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

0
இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!

இலங்கை சுற்றுலாத்துறைக்கு மேலும் ஓர் சர்வதேச விமான இணைப்பு!

2026-10-20
நாட்டின் பல பகுதிகளில் மின் தடை!

திட்டமிட்ட மின்வெட்டுகள் இன்றும் அமுல்!

2026-10-20
இன்று பிற்பகல் முதல் மழை தீவிரமடையும் சாத்தியம்!

இன்று பிற்பகல் முதல் மழை தீவிரமடையும் சாத்தியம்!

2026-10-20
ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு பிரித்தானியா தடை!

ரஷ்யாவின் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு பிரித்தானியா தடை!

2026-10-19
இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது!

2026-10-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: