• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பணிப்பகிஷ்கரிப்ப‍ை ஆரம்பித்த யாழ். பல்கலை விரிவுரையாளர்கள் சங்கம்!

பணிப்பகிஷ்கரிப்ப‍ை ஆரம்பித்த யாழ். பல்கலை விரிவுரையாளர்கள் சங்கம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/01/28
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
71 0
A A
0
33
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் விரிவுரையாளர்கள் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமது கோரிக்கைகளுக்கு நல்ல பதில் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக கலைபீட மாணவர்களின் ஒழுக்கமற்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் உரிய முறையில் தலையீடு செய்யாமையே இந்த பணிப்புறக்கணிப்புக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நேற்று (27) முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அவசர கலந்துரையாடலின் பின்னர் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் முழு வடிவம் வருமாறு,

அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவை கூட்டத்தின் பின்னர் பல்கலைக்கழகத்தின் கலை பீடாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இராஜினாமாவினை அடுத்துப் பல்கலைக்கழகம் பற்றி பல கருத்துக்கள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் நிலைமை குறித்து கலந்துரையாடும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழு கூட்டம் திங்கட்கிழமை (27) காலை 10 மணிக்கு கலைப்பீடத்தில் இடம்பெற்றது.

மீறல்களிலும், வன்முறைகளிலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தினை பாதிக்கும் வகையிலும், உடைமைச் சேதங்களை விளைவிப்பதிலும் சீரழிவு மிக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் கடந்த காலத்திலே உறுதியான நடவடிக்கைகளை எடுக்க தவறியமை குறித்து இந்தக் கூட்டத்தில் பல உறுப்பினர்களும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

திட்டமிட்ட முறையில் விசாரணைகளில் தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தண்டனைகளில் இருந்து தப்பித்துச் செல்ல நிர்வாகம் வழிசமைத்துக் கொடுப்பதாகக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

தண்டனையின் நோக்கம் மாணவர்களை விரோதிப்பது அல்ல; மாறாக தாம் செய்யும் தவறுகளை மாணவர்கள் உணர்ந்து எதிர்காலத்திலே செம்மையாகச் செயல்படும் வகையில் ஊக்குவிப்பதே என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இன்று (நேற்று) திங்கட்கிழமை அன்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஓர் அடையாள வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடுவது எனவும், நாளை செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் தொடர் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடுவதும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

கோரிக்கைகள்:

1. மோசமான செயல்களில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ராஜினாமா செய்த கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் அவர்கள் முன்வைத்த கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். பேராசிரியர் ரகுராம் தனது பதவி விலகலை வாபஸ் பெற்று மீளவும் பீடாதிபதி பொறுப்பை ஏற்பதற்கு உரிய ஒரு சூழலை பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழகத்திலே ஏற்படுத்த வேண்டும்.

2. மாணவர்களுக்கு எதிரான‌ ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்.

3. மோசமான செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உறுதியாக இருக்கும் போதிலும், அவற்றைப் பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வேண்டுமென்றே கால தாமதங்கள் ஏற்படுத்தல், வேண்டுமென்றே நிருவாகத் தவறுகளை இழைத்தல் போன்ற செயன்முறைகள் மூலம் மீறல்களில் ஈடுபட்ட மாணவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கு நிர்வாகம் வழிசமைத்துக் கொடுக்கும் போக்கு உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்படல் வேண்டும்.

4. இரண்டு மாணவர்கள் கணித புள்ளிவிபரவியல் துறையின் வாயிலில் இருந்த பூட்டினை உடைத்தமை தொடர்பிலே இடம்பெற்ற விசாரணையினை வேண்டுமென்றே தாமதமடையச் செய்த பல்கலைக்கழக நிருவாகிகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அதே போன்று கலைப் பீடத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை வேண்டுமென்றே இழுத்தடிப்போர் மீதும் விசாரணைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இது தொடர்பிலே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலையீட்டினையும் கோருவதற்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

5. கலைப்பீடத்திலும் விஞ்ஞானப் பீடத்திலும் மோசமான செயல்களிலே ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதில் இருந்து தவறிய பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களின் மீது எமது ஆசிரியர் சங்கம் நம்பிக்கையினை இழந்துள்ளது. எனவே எல்லா வெளிவாரி உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும். புதிய உறுப்பினர்கள் பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டும். இது தொடர்பான சங்கத்தின் விண்ணப்பம் ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

மேற்கூறிய ஐந்து கோரிக்கைகளையும் உள்ளடக்கிய கடிதம் ஒன்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கும், எல்லாப் பீடாதிபதிகளுக்கும் ஆசிரியர் சங்கத்தினால், இன்றைய (நேற்றைய) கூட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் ஒன்றுக்கு அமைய‌ அனுப்பிவைக்கப்பட்டது – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: Jaffnaயாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

கடந்த ஆண்டில் துஷ்பிரயோகம் தொடர்பில் 321 முறைப்பாடுகள்!

Related Posts

இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்!
இலங்கை

இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்!

2026-01-26
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 
இலங்கை

நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்

2026-01-26
பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான பசிலன் அருகில் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு!
உலகம்

பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான பசிலன் அருகில் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு!

2026-01-26
5,000 டொலர்களை விஞ்சிய தங்கத்தின் விலை; இலங்கையில் ஒரு பவுண் ரூ.397,000
ஆசிரியர் தெரிவு

5,000 டொலர்களை விஞ்சிய தங்கத்தின் விலை; இலங்கையில் ஒரு பவுண் ரூ.397,000

2026-01-26
வழங்கப்பட்ட அனுமதி :மீள திறக்கப்படவுள்ள பாடசாலை!
இலங்கை

வழங்கப்பட்ட அனுமதி :மீள திறக்கப்படவுள்ள பாடசாலை!

2026-01-26
சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்
இலங்கை

சிறீதரனை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்

2026-01-26
Next Post
கடந்த ஆண்டில் துஷ்பிரயோகம் தொடர்பில் 321 முறைப்பாடுகள்!

கடந்த ஆண்டில் துஷ்பிரயோகம் தொடர்பில் 321 முறைப்பாடுகள்!

ஜென்ம பாவம் நீக்கும் தை அமாவாசை பரிகாரம்!

ஜென்ம பாவம் நீக்கும் தை அமாவாசை பரிகாரம்!

ஐக்கிய இராச்சியத்தின் இந்து பசிபிக் பிராந்திய அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு!

ஐக்கிய இராச்சியத்தின் இந்து பசிபிக் பிராந்திய அமைச்சர் பிரதமருடன் சந்திப்பு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!

இரண்டு தங்கப் பதக்கங்களுடன் நாடு திரும்பினார் தவி சமரவீர!

0
இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்!

இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்!

0
தெற்காசியாவின் நீண்டகால அமைதி, ஸ்திரத்தன்மைக்கு இந்தியாவின் தலைமை பிரதானம் – நாமல் ராஜபக்ஷ 

நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்

0
அமெரிக்காவில் எட்டு பேருடன் புறப்பட்ட ஜெட் விமானம் விபத்து!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.