77 வது சுதந்திர தின விழாவை பொது மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டொக்டர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார்
இதனை பொதுமக்கள் நேரில் கண்டுகளிக்க வாய்ப்புகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, யாருக்காக சுதந்திர தின விழா நடத்தப்பட்டது என்ற கேள்வி எழுந்தது.இம்முறை, அதிக மக்கள் பங்களிப்புடன், மக்கள் சுதந்திர தின விழாவாக கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது, என அவர் கூறினார்.
இதேவேளை இந்த ஆண்டு 77வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான செலவு 87 மில்லியன் ரூபாவாக இருக்கும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது