சுவிட்சர்லாந்தின் Chur என்ற பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பட்டாசு வெடித்ததில் 24 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று(12) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காயமடைந்த மாணவர்களை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் 13 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களே காயமடைந்துள்ளனர் எனவும், இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.