பாரதிய ஜனதா கட்சியின் (BJP) முதல் சட்டமன்ற உறுப்பினரான ரேகா குப்தா வியாழன் (20) அன்று டெல்லி முதல்வராக பதவியேற்றார்.
இது 26 ஆண்டுகளுக்கும் மேலான காலப் பகுதியில் தேசிய தலைநகரில் ப.ஜா.க. மீண்டும் ஆட்சிக்கு வந்ததைக் குறிக்கிறது.
ரேகா குப்தாவைத் தவிர, பர்வேஷ் வர்மா, மஞ்சிந்தர் சிங் சிர்சா, கபில் மிஸ்ரா உள்ளிட்ட ஆறு சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவை அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
ஆஷிஷ் சூட், பங்கஜ் குமார் சிங், ரவீந்தர் இந்திரஜ் சிங் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான புதிய டெல்லி அரசாங்கத்தில் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) முன்னாள் தலைவர் கபில் மிஸ்ரா உட்பட 6 அமைச்சரவை அமைச்சர்களும் பதவியேற்றனர்.
குப்தாவின் ஆலோசனையின் பேரில், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்சா, ரவீந்தர் இந்த்ராஜ், கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகியோரை டெல்லி அரசாங்கத்தின் அமைச்சர்களாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர்கள் முன்னிலையில் முதல் முறையாக ரேகா குப்தா டெல்லி முதல்வராக பதவியேற்றார்.
30,000-க்கும் மேற்பட்ட கூட்டத்தின் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கங்களுக்கு மத்தியில் டெல்லியின் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இலாகாக்கள் இன்னும் ஒதுக்கப்படாத நிலையில், அமைச்சரவை நியமனங்கள் பா.ஜ.க.வின் சாதி சமன்பாடுகளை நன்கு சமநிலைப்படுத்துவதைக் குறிக்கிறது.
மஞ்சிந்தர் சிங் சிர்சா சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர், பர்வேஷ் வர்மா ஒரு செல்வாக்கு மிக்க ஜாட் தலைவர். கபில் மிஸ்ரா பாஜகவின் பிராமண சமூகம், ஆஷிஷ் சூட் பஞ்சாபி காத்ரி சமூகத்தைச் சேர்ந்தவர், ரவீந்தர் சிங் ஒரு தலித் தலைவர்.
விகாஸ்புரியில் இருந்து முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகவும், பல் மருத்துவராகவும் உள்ள பங்கஜ் குமார் சிங், பூர்வாஞ்சலி சமூகத்தினரிடையே அறியப்பட்டவர்.
அரவிந்த் கெஜ்ரிவால் வாக்கு அலைக்கு மத்தியில் 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்ற பாஜக மூத்த மற்றும் மூன்று முறை ரோகினி தொகுதியின் சட்டமன் உறுப்பினரான விஜேந்தர் குப்தா, சட்டமன்ற சபாநாயகராக இருப்பார்.
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டசபைக்கு கடந்த 5 ஆம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவு நேற்றுமுன்தினம் வெளியானது.
இதில் 48 இடங்களில் அமோக வெற்றி பெற்று, 27 ஆண்டு களுக்குப் பிறகு மீண்டும் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது.
ஆம் ஆத்மி 22 இடங்களை மட்டுமே பிடித்தது.
முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்தார்.
கடந்த 2 முறை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கட்டிலில் இருந்த ஆம் ஆத்மி கட்சி, தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது.
தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பெரும் பின்னடைவை சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.