ஒன்பதாவது செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது.
அதன்படி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 351 ஓட்டங்களை பெற்றது.
அதிகபட்சமாக பென் டக்கெட் 165 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 352 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் ஜோஷ் இங்லிஸ் 120 ஓட்டங்களை பெற்றதுடன் ஆட்டநாயகன் விருதையும் பெற்றுகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.