இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பிரதேசத்தில் பொதுமக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெறவுள்ளது.
நெடுந்தீவு கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி 11 மணியளவில் குறித்த பொதுமக்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. இக் கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் உட்பட அதிகாரிகள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
எனவே நெடுந்தீவு வாழ் பொதுமக்களும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துக்கொள்ளுமாறு யாழ் . பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.