மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்றைய தினம் கம்பஹா, யாகொடமுல்ல மஹாஹீன மயானத்தில் இருந்து டி-56 துப்பாக்கி, ஒரு மகசீன் மற்றும் 22 தோட்டாக்கள் என்பவற்றை கைப்பற்றினர்.
பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் கீழ் நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள், போதைப்பொருளை தடுக்கும் நடவடிக்கைளின் ஒரு பகுதியாக இவை மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸாரும், மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.