ஹட்டன்-ஷெனன் தோட்டத்திற்கு சொந்தமான தோட்ட தொழிலாளரின் தொடர் குடியிருப்பு ஒன்றில் இன்றிரவு தீப்பரபல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றிலும் எரித்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த தீ விபத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படாத நிலையில், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை இந்த தீ விபத்தினால் தோட்ட தொழிலாளர்களின் பொருட்கள் மற்றும் உடமைகள் தீக்கிரையாகியுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.