திருகோணமலை – மொரவெவ கட்டுக்குளம் வயற் பகுதியில் யானை ஒன்று சுகவீனமுற்ற நிலையில் அவதியுற்று வருகின்றது.
மொறவெவ பகுதியில் குறித்த காட்டு யானையானது வயற்காணிகளில் மேய்வதனை அப்பகுதி மக்கள் அவதானித்ததாகவும் அதனைத் தொடர்ந்து குறித்தயானையானது சுகவீனமுற்ற நிலையில் வயற்கணியினுள் விழுந்து கிடப்பதனை அப்பகுதி விவசாயிகள் அவதானித்துள்ளனர்.
குறித்த காட்டு யானை தொடர்பாக பொதுமக்க்ளால் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் தெரியப்படுத்தியிருப்பதுடன் சுகயீனத்திற்கான காரணம் இன்னமும் அறியப்படாத நிலையில் வைத்திய உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.