பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு ஹெராயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணை தடுத்து வைத்து விசாரிக்க அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்த தடுப்பு உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த அடிப்படை மனித உரிமை மீறலுக்காக அரசாங்கம் மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பாக பேலியகொட சிறப்பு புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்ட ஹேனகம, பொகுனுவிட்ட பகுதியைச் சேர்ந்த காஞ்சனா பிரியதர்ஷனி மதுரப்பெரும என்ற பெண் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது