2023 ஆம் ஆண்டு வெலிகம – பெலேன பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஆறு சந்தேக நபர்கள் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்
இதேவேளை உயர் நீதிமன்றத்தினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன் 20.03.2025 அன்று சரணடைந்திருந்தார்
இதேவேளை தேசபந்து தென்னகோன் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது