பொலிஸ் செய்தித் தொடர்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, தான் இடமாற்றம் கோரியுள்ளதாகவும், அண்மைய ஊடக அறிக்கைகளில் கூறப்படுவது போல் தான் இராஜினாமா செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக தான் இடமாற்றம் கோரியதாகவும் குறிப்பிட்டார்.
நான் இடமாற்றத்திற்கான கோரிக்கையை சமர்ப்பித்துள்ளேன்.
தேசிய பொலிஸ் ஆணையம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளால் பொருத்தமான நியமனம் செய்யப்படும் வரை, நான் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று அவர் விளக்கினார்.