பல பகுதிகளில் அவசர நீர் வெட்டு குறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்சார சபைக்குச் சொந்தமான அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, குறித்த நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்வரும் 27 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை 8 1/2 மணி நேரம் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவை நகர சபைப் பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று நீர் வழங்கல் சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.