அயோத்தி, கருடன், நந்தன்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களையடுத்து சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’ இந்த படத்தை ‘குட் நைட்’ படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அதில் இலங்கைத் தமிழர்களாக நடித்துள்ள சசிகுமார் மற்றும் சிம்ரனின் இலங்கை தமிழ் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த திரைப்படத்தின் பிரத்யேக காட்சி ஒன்று பிரபலங்களுக்கு சமீபத்தில் போடப்பட்டது. இந்த திரைப்படத்தை பார்த்த அனைவரும் வெகுவாக பாராட்டி உள்ளனர். இதனால் இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே வரவேற்பை பெற்றுள்ளதால் திரையரங்கில் வெளியாகும்போது இன்னும் பெரிய வரவேற்பை பெற்றுத்தரும் என்பதே பலரின் கருத்தாக நிலவுகிறது.
இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் படத்தின் நீளம் 2 மணிநேரம் 6 நிமிடங்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.
இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 01ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பித்தக்கது.