யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம் காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, மாலை 04 மணி வரையில் அமைதியான முறையில் நடைபெற்றது.
அதன் போது, 56.6 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவினருக்கு 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 01 மாநகரசபை, 03 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் 17 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றன.
குறித்த சபைகளில் உள்ள 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3, 519 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களிலிருந்து போட்டியிட்ட நிலையில் மக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்தலில் யாழ்ப்பாணத்தில், 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.