கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி,பச்சிலைப்பள்ளி,பூநகரி உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல் சுமூகமான முறையில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் மாலை 4.00 யின் இறுதி முடிவுகள் வாக்களிப்பு வீதம் 61 சதவீதமாக வாக்கு பதியப்பட்டுள்ளதென மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச சபைகளுக்கான கரைச்சி 35 உறுப்பினர்களையும் , பூநகரி 20 உறுப்பினர்களையும், பச்சிளைப்பள்ளி சபைகளுக்கு 13 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் மூன்று பிரதேச சபைகளுக்கும் 40 வட்டாரங்களில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்களிப்புகள் நிறைவடைந்துள்ளன.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று மாலை 4 மணி வரையில் 61 வீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதென மாவட்ட செயலாளர் எஸ். முரளிதரன் தெரிவித்துள்ளார்.