திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பானது காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மிகவும் சுதந்திரமான முறையில் வாக்களிப்பு நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் காலை 9.15 மணி வரை 16.1 சதவீதமான வாக்களிப்பும், காலை 10.00 மணி வரை 21.2சதவீதமான வாக்களிப்பும், காலை 11.00 மணி வரை 27.3சதவீதமான வாக்களிப்பும் பகல் 12.00 மணி வரை 36.44சதவீதமான வாக்களிப்பும், பிற்பகல் 2.00 மணி வரை 48.7 சதவீதமான வாக்களிப்பும் மாலை 4.00 மணி வரை 68சதவீதமான வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் 321 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கும் நடவடிக்கைகள் நிறைவுற்றதை தொடர்ந்து உடனடியாக 129 நிலையங்களில் வாக்கெண்ணல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.