யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் இன்றைய தினம் (21) முதல் பணி பகிஷ்கரிப்பிலும் மயிலிட்டி பகுதியில் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் பொலிசார் தலையிட்டு வழமை போன்று சேவையில் ஈடுபடுமாறு கூறியதையடுத்து அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டது.
மயிலிட்டி பகுதியில் இருந்து தமது சேவைகளை ஆரம்பிக்க அனுமதி கோரியே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.














