குஜராத்தின் பனஸ்கந்தா பகுதியில் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதியை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இந்திய ராணுவம் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்த நிலையில் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில், எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் மீது நேற்றிரவு (மே 23) எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.



















