குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று நண்பகல் 1.17-க்கு லண்டன் புறப்பட்ட எயார் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அகமதாபாத்தில் விமானம் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் குறித்த விமானம் விபத்துக்குள்ளானது. இதனால் குறித்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது.
இவ் விபத்து இடம்பெற்ற வேளை குறித்த விமானத்தில் சுமார் 242 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமானத்தில் இருந்த பயணிகளின் நிலை என்ன என்பது குறித்து அச்சம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
















