• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக ஊழியர்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக ஊழியர்கள் போராட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/07/14
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தினை முற்றுகையிட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிக நிலைய ஊழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

கடந்த 10வருடத்திற்கும் மேலாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதி சீரமைப்பு ஊழியர்களாக பணியாற்றும் தற்காலிக நிலை ஊழியர்களே இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தங்களை இணைத்துக்கொள்ளும்போது எந்த கல்வித்தகமையும் கோராத நிலையில் இன்று கல்வி பொது தராதர சாதாரண தரம் கற்றிருந்தால் மட்டுமே தமது தொழில் நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக்காரியாலயத்தில் கல்வி பொது தராதர சாதாரண தரம் உள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிக கடமையாற்றும் ஊழியர்களுக்கான நேர்முகதேர்வு நடைபெற்றுவரும் நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வீதிகளில் நெருப்பு வெயிலுக்கும் மத்தியிலும் மழைகாலத்திலும் கடுமையான பணிகளை முன்னெடுத்துவரும் தமக்கான நிரந்தர நியமனத்தினை வழங்குவதற்கு கல்வி சான்றிதழ் என்ற விடயத்தினைக்கொண்டுவந்து தமது உரிமையினை பறிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது ஊழியர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டது.

கல்வித்தரம் கோரப்படாத நிலையில் தாங்கள் தற்காலிக நிலையில் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குள் உள்வாங்கப்பட்டு 10வருடத்திற்கு மேலாக பணியாற்றிய நிலையில் இன்று கல்விச்சான்றிதழ் கொண்டுவாருங்கள் நிரந்தர நியமனம் தருகின்றோம் என்று கூறுவதானது எங்களது வாழ்க்கையினை கேள்விக்குறியாக்கும் செயற்பாடு எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, 30,000 ரூபா சம்பளமே மாதந்தம் பெற்றுவருவதாகவும் பொருளாதார நெருக்கடி நேரத்திலும் தாங்கள் பல கஷ்டங்களுக்கு மத்தியிலேயே குடும்பத்தினை நடாத்திவரும் நிலையில் விடுமுறையும் இல்லாமல் கடமையாற்றிக்கொண்டிருக்கும் நிலையிலும் தமக்கான நிரந்தர நியமனத்தினை வழங்குவதற்கு பின்னடிக்கும் செயற்பாடுகளை கைவிட்டு அனைவரையும் நிரந்தர நியமனத்திற்குள் உள்ளீர்ப்பதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் எனவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் ஊழியர்களின் இந்த கோரிக்கை தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அமைச்சின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக தெரிவித்தனர்.

Related

Tags: Batticaloaprotestsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புனர்வு வாரம் ஆரம்பம்!

Next Post

மலேசியாவில் கைதான 26 இலங்கையர்கள் தொடர்பான தகவல்!

Related Posts

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்
இலங்கை

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்

2026-02-04
கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்
அம்பாறை

கல்முனை பிரதேச செயலகத்தில் 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

2026-02-04
உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்
இலங்கை

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

2026-02-04
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு
அம்பாறை

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

2026-02-04
3 கிலோ ஹெரோயினுடன் தாய்லாந்து நாட்டவர் உட்பட இருவர் கைது!
இலங்கை

3 கிலோ ஹெரோயினுடன் தாய்லாந்து நாட்டவர் உட்பட இருவர் கைது!

2026-02-04
9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!
இலங்கை

9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!

2026-02-04
Next Post
மலேசியாவில் கைதான 26 இலங்கையர்கள் தொடர்பான தகவல்!

மலேசியாவில் கைதான 26 இலங்கையர்கள் தொடர்பான தகவல்!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நாட்டில் பாரியளவான போதைப்பொருட்கள் மீட்பு

நாட்டில் பாரியளவான போதைப்பொருட்கள் மீட்பு

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்

பாரிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த தயாராக உள்ள அரசாங்கம்

0
தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

0
கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்

கல்முனை பிரதேச செயலகத்தில் 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

0
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.