யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் முருகன் கோயில் அருகாமையில் நேற்றைய தினம் (18) பிற்பகல் 5 மணியளவில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது .
குறித்த பகுதியில் வீட்டுவேலைக்காக வேலையாட்கள் அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்த நிலையில் அப்பகுதியில் வெடிக்காத நிலையில் ஒரு வகை வெடி குண்டினை கண்டுபிடித்துள்ளனர்.
இதை அடுத்து மருதங்கேணி பொலிசார்க்கு வெடிகுண்டு குறித்து தகவலளிக்கப்பட்டது.
இதன் பின் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசார் குறித்த வெடிகுண்டை மீட்டு சென்றுள்ளனர்.
மேலும் குறித்த வெடிகுண்டு தொடர்பில் மருதங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















