சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) தாண்டியதாகக் கூறி, ராமேஸ்வரம் மற்றும் பாம்பனைச் சேர்ந்த 14 மீனவர்கள் செவ்வாய்க்கிழமை இரண்டு தனித்தனி சம்பவங்களில் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க உடனடியாக இராஜதந்திர தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த முதல் சம்பவத்தில், மன்னார் பகுதிக்கு அருகே இயந்திரமயமாக்கப்பட்ட படகில் இருந்த ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, மேலதிக நடவடிக்கைக்காக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் படகு உரிமையாளர் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜே.ஜஸ்டின் (வயது51), பாம்பனைச் சேர்ந்த எஸ்.டெனிசன் (வயது39), எஸ்.சேகர் (வயது55), ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜே.மோபின் (வயது24), டி.சைமோன் (வயது 55) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பின்னர், பாம்பனில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகில் புத்தளம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மீனவர்கள் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கே.ராஜா, (வயது 44), ஜி.ஆனந்தம் (வயது 49), ஆர்.முருகதாஸ் (வயது 41), ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆர்.சன்னிமேல் (வயது 27), மண்டபத்தைச் சேர்ந்த எம்.அரியப்பன் (வயது 38), பாம்பனைச் சேர்ந்த திக்ஷன் (வயது 24) தூத்துக்குடியைச் சேர்ந்த டபிள்யூ. முருகேசன் (வயது 51), எஸ்.கோட்டசாமி (வயது 45)பி.முருகன் (வயது 42)
மீனவர்களின் விடுதலை தொடர்பாக எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர், ஜூலை மாதத்தில் பதிவு செய்யப்பட்ட நான்காவது மீனவர் கைது சம்பவம் இதுவாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது 235 மீன்பிடி படகுகளும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 68 மீனவர்களும் இலங்கை காவலில் இருப்பதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டதுடன், இந்த விடயத்தை பொருத்தமான இராஜதந்திர வழிகள் மூலம் அவசரமாக தீர்க்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன் என்றும் வலியுறுத்தினார்.
அதேநேரம், தமிழக மீனவர் சங்கங்களும் தலைவர்களும் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.



















