மத்திய பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேலும், இடிந்து வீழ்ந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதனால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
பிலிப்பைன்ஸின் மத்திய விசாயாஸ் பகுதியில் உள்ள செபு மாகாணத்தில் உள்ள போகோ நகரின் கடற்கரையில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு 10 மணிக்கு (1400 GMT) முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டது.


இதனால், மின்சாரம் தடைப்பட்டதுடன்,100 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு தேவாலயம் உட்பட கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன.
பிலிப்பைன்ஸின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான செபு மாகாணத்தில் 3.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
நாட்டின் இரண்டாவது பரபரப்பான நுழைவாயிலான மக்டன்-செபு சர்வதேச விமான நிலையம் செயல்பாட்டில் உள்ளது.
சான் ரெமிஜியோ உட்பட வடக்கு செபுவில் இந்த நிலநடுக்கம் கடுமையாக தாக்கியது.
அண்டை நகரமான போகோவில், நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில், மருத்துவமனை நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் வலுவான பின் அதிர்வுகள் பல குடியிருப்பாளர்களை வெளியேற்றும் மையங்களிலும் தெருக்களிலும் தஞ்சம்புகுர கட்டாயப்படுத்தியது.
நிலநடுக்க கண்காணிப்பு முகமைகள் நிலநடுக்கத்தின் ஆழத்தை சுமார் 10 கிமீ (6.2 மைல்) வரை வைத்து பல பின்அதிர்வுகளை பதிவு செய்தன, இது 6 ரிக்டர் அளவில் வலுவானது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை.
பிலிப்பைன்ஸ் பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” பகுதியில் உள்ளது.
அங்கு எரிமலை செயல்பாடு மற்றும் பூகம்பங்கள் பொதுவானவை.
ஜனவரியில் நாட்டில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
எனினும், எந்த உயிரிழப்பும் இல்லை.
2023 இல், 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் எட்டு பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

















