இரண்டாம் உலகப் போரில் போராடாத மில்லியன் கணக்கானவர்களை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்பட்டு அந்த அம்மக்களை கவுரவிக்கும் நிகழ்வு ஒன்று இங்கிலாந்தில் இடம்பெற்றது.
இரண்டாம் உலகப் போரில் சுரங்கம் அல்லது போர்க்கப்பல்களுக்கு சங்கிலிகள் தயாரிப்பது போன்ற போர் முயற்சிக்கு முக்கியமான வேலைகளைக் கொண்டிருந்த மக்கள், இரண்டாம் உலகப் போருக்குச் சென்று போராட விரும்பினாலும் கூட, அவர்கள் அதில் சேர அனுமதிக்கப்படவில்லை இவர்களை கவுரவிக்கும் முகமாக இந்த நினைவு சின்னம் அமைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு அவர்கள் கெளரவிக்கப்படுகின்றனர்.
( Black Country chain ) பிளாக் கன்ட்ரி சங்கிலி தயாரிப்பாளரின் ஒரு கம்பீரமான சிலை , கிராட்லி ஹீத்தில் (Cradley Heath) உள்ள ஒரு தேவாலயத்தின் விளிம்பில் வைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் பின்னணி வேலைகள் மிக முக்கியமானவை என்பதால் போராட அனுமதிக்கப்படாத மில்லியன் கணக்கான மக்களை இது நினைவுகூருவதாக கூறப்படுகின்றது.
நினைவுச்சின்னம் நேற்றையதினம் திறக்கப்பட்டு மக்கள் அந்த உருவ சிலைகளுக்கு அஞ்சலி செழுத்தி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.


















