தெற்கு கடற் பகுதியில் இலங்கை, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கிய விடயங்களை சட்ட அமுலாக்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவரும் உள்ளார்.
அதன்படி, பன்னாலையைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உள்ளூராட்சி வேட்பாளரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அவரது பங்கு மற்றும் சாத்தியமான பரந்த தொடர்புகளைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருகின்றன.
தடுத்து நிறுத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தும் கப்பலில் இருந்து 200 கிலோகிராம் படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்),100 கிலோ கிராம் ஹெரோயின் ஆகியவற்றை அதிகாரிகள் மீட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இவற்றின் பெறுமதி 4 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கப்பலை மேலும், சோதனை செய்தபோது ஹெரோயின், ஐஸ் அடங்கிய 18 பொதிகள், இரண்டு துப்பாக்கிகள் மற்றும் மெகசின்கள் என்பவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தெற்கு கடலில் கடல் ரோந்துப் பணியின் போது கடற்படையினர் நேற்று (20) படகைக் கைப்பற்றியதுடன், அதிலிருந்து ஆறு போரை கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட படகுடன் கைதான நபர்கள் மேலதிக விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.















