மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் எவ்வித சட்ட சிக்களும் கிடையாது காலம் காலமாக ஆட்சியாளர்கள் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கு தடையான விடயங்களை மாத்திரம் சுட்டிக்காட்டி வருவதாக சட்டத்தரணி மோகனதாஸ் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட பேரிடரை தொடர்ந்து மலையக பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் நட்ட ஈடு பெற்றுக்கொள்வதிலும் நிவாரணங்கள் பெற்றுக்கொள்வதிலும் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர் இதற்கு பிரதான காரணமாக இருப்பது காணி உரிமை இல்லாமையே இதனால் இவர்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் வெறும் வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கி விட்டு பின்னர் மறந்து விடுவதாகவும் மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று ஹட்டன் பகுதியில் விருந்தகத்தில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மலையகப்பகுதியில் அனர்த்தங்கள் ஏற்படும் போதெல்லாம் காணிகள் பெற்றுக்கொள்வதற்கு இலங்கையில் உள்ள சட்டங்கள் இடையூறாக காணப்படுவதாக ஆனால் அதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் 72 காணி சீர்திருத்த சட்டத்திலும் அது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அது மாத்திரமன்றி தோட்டங்களை குத்தகைக்கு வழங்கும் போது அதில் காணி தொடர்பான சீர்த்திருத்தங்களை மேற்கொள்வதற்கு போதியளவு ஏற்பாடுகள் இருப்பதாகவும் அதனால் தோட்டத்தொழிலாளர்களுக்கு 20 பேச்சஸ் காணிகள் பெற்றுக்கொடுத்தாலே அது தற்போது உள்ள தரிசு நில அளவில் எட்டு வீதம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து மலையக மக்களின் காணி உரிமைக்கான செயப்பாட்டாளர் கணேசலிங்கம் கருத்து தெரிவிக்கையில் …
டிட்வா சுறாவளியின் நுவரெலியா மாவட்டத்தில் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன ஆனால் அது தொடர்பான உண்மையான தகவல்கள் இது வரை வெளியாகவில்லை அதில் 15 வீடுகள் மாத்திரம் தான் முற்றாக சேதமுற்று இருப்பதாக அரசாங்கம் அறிவித்தது ஆனால் சடூக ஊடங்களில் பல தகவல்கள் வெளியாகின.
ஆகவே அரசாங்கம் உண்மையான தகவல்களை சேகரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை நாங்கள் முன் வைக்கிறோம்.
1972 ஆண்டு ராகலை லிடஸ்லேன்ட் தோட்டத்திலே பாரிய மண்சரிவு ஏற்பட்டு 21 பேர் மண்ணோடு மண்ணாக போனார்கள்,அதன் பின் இரண்டாவது சம்பவமாக 2012 ஆண்டு மாத்தளை ரத்தோட்டை தோட்டத்திலே நிக்கலோயா தோட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மண்ணோடு மண்ணாக போனார்கள்
அதனை தொடர்ந்து 2014 ஆண்டு மீறியாபெத்தை சம்பவத்திலே 37 மண்ணோடு மண்ணாகி போனார்கள்,இவை எதுவும் புதிய சம்பவங்கள் அல்ல.அண்மையில் ஏற்பட்ட டிட்வால் கூட பாரிய அளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன இதற்கு இந்த அரசாங்கம் அதற்கு முன்னிருந்த அரசாங்கம் மக்கள் உரிய பாகாப்பினை பெற்றுக்கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டினை நாங்கள் முன்வைப்பதற்கு கடமைபட்டுள்ளோம்.
அது மாத்திரமன்றி பாதுகாப்பான இடங்களில் மக்களை குடியமர்த்துவதிலும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதிலும் அரசாங்கம் தவறிழத்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
புதிய ஜனநாயக மாக்சீச லெனின் கட்சியின் அமைப்பாளர் மகேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,
மலையக மக்களின் காணி வீட்டுரிமை தொடர்பான பேசுவதற்கு குறித்த ஒன்றுகூடல் இடம்பெற்றதாகவும் இந்த அரசாங்கம் மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருப்பதாகவும் அது ஹட்டன் பிரகடனத்தில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் எனவே இப்போது அதற்கான சந்தர்ப்பம் மற்றும் தேவை ஏற்பட்டிருப்பதாகவும் எனவே இது குறித்து அரசாங்கம் உரிய முறையில் கவனமெடுத்து 20 பேச்சஸ் காணியினை அனைவரும் பாகுபாடின்றி பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் இதன் போது கோரிக்கை விடுத்தார்.
இதில் இன்னும் பல அமைப்புக்களை சேர்ந்தவர்களும் கருத்து தெரிவித்தனர்.
இதில் புதிய ஜனநாயக மாக்சீச லெனின் கட்சியின் பிராந்திய செயலாளர் டேவிட் சுரேன் முக்கிய சுட்டிக்காட்டினார் கோட்டபாய ஆட்சி காலத்தில் சங்கிரில்லா ஹோட்டலுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்கும் போது அவர்கள் விருப்பட்ட இடத்தை அவர்கள் வழங்கினார்கள் இரானுவத்திற்கு சொந்தமான காணியினை பெற்றுக்கொடுத்தார்கள் இப்போது தேசிய மக்கள் சக்தியும் அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய எல்கடுவ பிளான்டேசன் ஜேயிடிபி,எஸ’எல’ எஸ்.பி.சி ஆகிய தோட்டங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அந்த அடிப்படையில் 1500 ஹெக்டேயர் நிலம் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர்ஆனால் மலையக மக்களுக்கு காணிகளை கொடுப்பதில் தான் கடந்த கால அரசாங்கம் முதல் எல்லா அரசாங்கங்களுக்கும் வறுத்தம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.















