நுவரெலியா, கிரெகரி வாவியில் தரையிரங்க முயன்ற Sea plane வீழ்ந்து விபத்திற்குள்ளானமை தொடர்பில் சிவில் விமான சேவைகள் அதிகார சபை முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கென உயர்மட்ட அதிகாரிகள் குழு நுவரெலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமானி தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
விமானம் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்தபோது விபத்துக்குள்ளாகியிருந்தது.
விமானத்திலிருந்த 02 விமானிகள் காயமடைந்த நிலையில், கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்டிருந்தனர்.
நுவரெலியாவிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் குழுவை ஏற்றிச்செல்வதற்காக சென்ற Sea plane இவ்வாறு விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
















